×

ஒன்றிய அரசின் கல்வி நிறுவனத்தில் 49 ஆசிரியரல்லாத இடங்கள்

டிகிரி, பிளஸ் 2 படித்திருந்தால் போதும்ஒன்றிய அரசின் கல்வித் துறை அமைச்சகத்தின் கீழ் மத்திய பிரதேசம், போபாலில் இயங்கும் மவுலானா ஆசாத் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள 49 இடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணியிடங்கள் விவரம்:1. Technical Assistant: 22 இடங்கள் ( பொது-11, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-5, எஸ்சி-3, எஸ்டி-1). இவற்றில் ஒரு இடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சம்பளம்: ரூ,9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. வயது: 30க்குள். தகுதி: 60% தேர்ச்சியுடன் பி.இ.,/பி.டெக்.,/எம்சிஏ அல்லது 60% தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு டிப்ளமோ இன்ஜினியரிங் அல்லது 60% தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு அறிவியல் பாடத்தில் பட்டம் அல்லது 50% தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டம். வயது: 30க்குள்.2. Technician: 26 இடங்கள் (பொது-13, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-7, எஸ்சி-3, எஸ்டி-1). இவற்றில் ஒரு இடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2000. தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 வில் அறிவியல் குரூப்பில் தேர்ச்சி அல்லது 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு டிரேடில் ஓராண்டு ஐடிஐ படிப்பு அல்லது 60 சதவீத மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு டிரேடில் 2 ஆண்டு ஐடிஐ படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ இன்ஜினியரிங். வயது: 27க்குள்.3. Pharmacist: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800. தகுதி: அறிவியல் குரூப்பில் பிளஸ் 2 தேர்ச்சியுடன், 60% மதிப்பெண்களுடன் 2 ஆண்டு பார்மசி பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பார்மசி பாடத்தில் பட்டப்படிப்பு.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.manit.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 4.1.2023.

The post ஒன்றிய அரசின் கல்வி நிறுவனத்தில் 49 ஆசிரியரல்லாத இடங்கள் appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Maulana ,Bhopal, Madhya Pradesh ,Ministry of Education of the Union Government ,Union Government Educational Institute ,Dinakaran ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...